Published : 22 Jul 2021 04:10 PM
Last Updated : 22 Jul 2021 04:10 PM
கரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 3570 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கரோனா 2-வது அலை தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிப்ரவரி 15-ம் தேதியன்று 10 ஆயிரத்துக்கும் கீழ் (9,139) சென்ற நிலையில், மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி மார்ச் மாதத்தில் 30 ஆயிரத்தை மீண்டும் கடந்தது.
ஏப்ரல், மே மாதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா பரவல் ஜூன் மாதத்தில் குறையத் தொடங்கியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் கரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பை பொறுத்வரையில் இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது,
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 507 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 165 பேர் மகாராஷ்டிராவிலும், 105 பேர் கேரளாவிலும் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 18 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 3570 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 3570 இந்தியர்கள் வெளிநாடுகளில் பலியாகியுள்ளதாகவும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த தகவல்களின் அடிப்டையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT