Published : 19 Jul 2021 12:17 PM
Last Updated : 19 Jul 2021 12:17 PM
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
#WATCH | Delhi: Trinamool Congress (TMC) MPs cycled to the Parliament today in protest against the rise in prices of petrol, diesel and LPG.#MonsoonSession pic.twitter.com/4NE72QhNjp
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 17-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.
- டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாதாகைகளை தங்கள் உடம்பில் கட்டியிருந்தனர். நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு வந்த அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT