Last Updated : 18 Jul, 2021 08:00 AM

1  

Published : 18 Jul 2021 08:00 AM
Last Updated : 18 Jul 2021 08:00 AM

கரோனா 3-வது அலை அச்சம்: கன்வர் யாத்திரையை ரத்து செய்தது உ.பி. அரசு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்|: படம் ஏஎன்ஐ

லக்னோ


கரோன 3-வது அலை வர வாய்ப்புள்ளதால் கன்வர் யாத்திரையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு நேற்று நள்ளிரவு அறிவித்தது.

கன்வர் யாத்திரை என்பது உபி. டெல்லி, பிஹார், உத்தரகாண்ட் ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவ பக்தர்கள் ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்குக்கு ஆண்டுதோறும் பாத யாத்திரயைாக செல்வார்கள். ஹிரித்துவார் நகரில் கங்கை நதியில் புனிதநீராடி, புனித நீர் எடுத்து வீடு திரும்புவர். வழக்கமாக கன்வர் யாத்திரை ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்கும். இ்ந்த ஆண்டு வரும் 25-ம் தேதி நடத்த உ.பி. அரசு திட்டமிட்டிருந்தது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அதில் “ இந்த ஆண்டு கன்வர் யாத்திரையில் மக்கள் கூட்டமாகச் செல்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு மதரீதியான ஊர்வலங்கள் செல்வது, கரோனா 3-வது அலைக்கு வழிவகுக்கும், மக்களின் அடிப்படை உரிமையான வாழும் உரிமைக்கு எதிரானது” என அறிவுறுத்தியது.

இதையடுத்து, இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்தது. ஆனால், உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்வது குறித்து ஏதும் அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சிங்கால் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் “ உத்தரப்பிரதேச அரசு கன்வர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த ஆண்டு கன்வர் பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா பரவல் சூழல், 3-வது அலை ஆகியவற்றை மனதில் வைத்து கன்வர் சங்கத்திடம் பேசினோம்.

மதரீதியான சடங்கும் பாதிக்கப்படக்கூடாது, அதேநேரத்தில் மக்களின் பாதுகாப்பும் முக்கியம். கடந்த ஆண்டும் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் யாத்திரை ரத்து செய்யப்பட்டது, இந்த ஆண்டும் கரோனா சூழல் கருதி யாத்திரை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x