Last Updated : 18 Jul, 2021 03:14 AM

 

Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

வடகிழக்கு மண்டலத்தில் 14 ரயில் நிலையத்தில் தகவல் சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் 14 ரயில் நிலையங்களில் தகவல் சேவை மையப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை பொறுத்து நாடுமுழுவதும் படிப்படியாக இந்த சேவையை தனியாரிடம் ஒப்படைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ரயில்வே சார்பில் அதன் பல்வேறு வழித்தடங் கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்குஒரு தரப்பினர் எதிர்ப்பும் மற் றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ரயில் நிலை யங்களில் குறிப்பிட்ட பணியை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிஎடுக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக வடகிழக்கு ரயில்வே மண்டலத்தின் 14 ரயில் நிலையங்களின் தகவல் சேவை (Enquiry) மையப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு தகவல் சேவை மையங்களில் வேண்டியத் தகவல்கள் கிடைப்பது சிரமமாகி வருகிறது.

இப்பணியிலுள்ள ரயில்வே ஊழியர்களால் பொதுமக்களை திருப்திபடுத்த முடியவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இதில் ரயில்வே துறை பல்வேறு மாற்றங்கள் செய்தும் பலனில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் முதல் கட்டமாக 14 ரயில்நிலையங்களின் தகவல் சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை பொறுத்துநாட்டின் மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த சேவை படிப்படியாக தனியார்மயமாகும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனி சீருடை

இந்த 14 தகவல் சேவை மையங்களில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தனி சீருடை அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையினர் சீருடையை அவர்கள் அணிய முடியாது.

இந்த தகவல் சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இவற்றில் 8 மணி நேரத்துக்கு ஒருவர் என மூன்று ஷிப்டுகளில் அலுவலர்கள் இருப்பார்கள்.

உத்தர பிரதேசத்தில் வாரணாசி, பலியா, மாவ், ஆசம்கர், பிரயாக்ராஜ், காஜிபூர், தியோரியா ஆகிய ரயில் நிலையங்களில் தனியார் தகவல் சேவை தொடங்கியுள்ளது.

சிரமம் குறையும்

இதுபோல் பிஹாரில் சிவான்மற்றும் சாப்ராவிலும் மேற்கு வங்கத்தில் சீலாம்பூர், ஒதிதார் ஜங்ஷன் ஆகிய ரயில் நிலையங்களிலும் இந்த சேவை தொடங்கியுள்ளது. தனியார் தமக்கானப் புதிய முறைகளுடன் ரயில் வருகை மற்றும் புறப்படும் நேரத்தை பிளாட்பார எண்களுடன் அளிப்பார்கள். இதன்மூலம், பொதுமக்களின் சிரமங்கள் குறையும் என எதிர்பார்க் கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x