Published : 01 Feb 2016 08:17 PM
Last Updated : 01 Feb 2016 08:17 PM
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர்.
மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது கொன்கன் கடற்கரைப்பகுதியில் உள்ளது இங்கு சுமார் 12 கடற்கரைகள் உள்ளன. கோவாவுக்குப் பதிலாக இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் தேர்வு செய்வதுண்டு.
இந்நிலையில் புனேயிலிருந்து 155 மாணவர்கள் முருத் மெயின் பீச்சுக்கு வந்தனர். இவர்களில் சிலர் கடலில் இறங்கி நீச்சல் அடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். இதில் 13 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என்றும் இதில் 3 பெண்கள் அடங்குவர் என்றும் காவல்துறை உயரதிகாரி அரவிந்த் பாட்டீல் தெரிவித்தார்.
உள்ளூர்வாசிகளும், போலீஸும் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், பலியானோர் முழு விவரம் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
இந்த மாணவர்கள் புனேயில் உள்ள அபேதா இனாம்தார் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT