Published : 17 Jul 2021 09:53 PM
Last Updated : 17 Jul 2021 09:53 PM
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 40 கோடியை தாண்டியுள்ளது.
இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, 40 கோடிக்கும் அதிகமான (40,44,67,526) மக்கள் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 46.38 லட்சம் (46,38,106) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன
18-44 வயது பிரிவில் 21,18,682 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 2,33,019 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர்.
37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 12,40,07,069 பேர் முதல் டோஸையும், 48,50,858 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிஹார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 71,42,613 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 3,25,953 நபர்கள் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் 2,29,376 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,533 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT