Published : 17 Jul 2021 05:12 PM
Last Updated : 17 Jul 2021 05:12 PM
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடராமல் போனதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைதான் காரணம் என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டி இருக்கிறார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் மத்திய ஆசிய மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார்.
அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இம்ரான் கானிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நின்று போனது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
இந்தியாவுடன் ஒரு முதிர்ச்சியடைந்த நல்ல அண்டை நாடாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் விருப்பம்.
இதற்கான நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம். இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தநிலையில் நின்று போனதற்கு ஆர்எஸ்எஸ் கொள்கைதான் காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறி்தது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘பேச்சுவார்த்தை நின்று போனதற்கு பாகிஸ்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்த்து விட்டு அந்த பகுதியை துண்டித்து விட வேண்டும் என்ற பாகிஸ்தானின் எண்ணமே அனைத்துக்கும் தடையாக உள்ளது.
இதுபோன்ற சூழலில் பேச்சவார்த்தை எப்படி நடைபெறும். இம்ரான் கானின் பேச்சு கண்டிக்கத்தக்கது’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT