Published : 15 Jul 2021 12:46 PM
Last Updated : 15 Jul 2021 12:46 PM
மறைந்த தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 119-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசு கடைபிடிக்கப்படுகிறது.
இதையட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
Paying homage to the great Shri K. Kamaraj on his birth anniversary. He dedicated his life to national development and social empowerment. His emphasis on education, healthcare and women empowerment continue to inspire the people of India.
— Narendra Modi (@narendramodi) July 15, 2021
பிரதமர் மோடியும் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமையடைய செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் வலியுறுத்திய கல்வி, சுகாதாரம் பெண்ணுரிமை ஆகியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT