Published : 12 Jul 2021 10:24 PM
Last Updated : 12 Jul 2021 10:24 PM
இந்துக்கள் வாழும் பகுதியில் கால்நடைகளை வதை செய்யக் கூடாது, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டும்தான் மாட்டிறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல புதிய ஷரத்துகளை உள்ளடக்கிய அசாம் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம் 2021 இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கலானது.
முன்னதாக கடந்த 8 ஆம் தேதியன்று இச்சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஒப்புதல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இச்சட்டம் தாக்கலாகியிருக்கிறது.
அசாமில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முதல்வராக, ஹிமந்தா பிஸ்வ சர்மா பதவியேற்றார்.
புதிய அரசு பதவியேற்ற உடனேயே, பசுக்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்க பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்துக்கள் வாழும் பகுதியில் மாடுகளை வதை செய்யக் கூடாது, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டும்தான் மாட்டிறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல புதிய ஷரத்துகளை உள்ளடக்கிய அசாம் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம் 2021 இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கலாகி இருக்கிறது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், உரிய அனுமதி இல்லாமல் வதை கூடங்களில் மாடுகளை வதை செய்யக்கூடாது. 14 வயதுக்கு மேற்பட்ட மாடுகள் தான் வதை செய்யப்படலாம். அதற்கும் கால்நடை மருத்துவர்களின் உடற்தகுதி சான்றிதழ் வேண்டும். எக்காரணம் கொண்டும் பசுவையும், கன்றையும் வதை செய்யக்கூடாது என்றெல்லாம் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்துக்கள், ஜெயின், சீக்கிய சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதியில்லை. கோயில், சத்தாரா அல்லது வேறு எந்த வழிபாட்டுத்தலம் அமைந்த பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்துக்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT