Published : 12 Jul 2021 10:32 AM
Last Updated : 12 Jul 2021 10:32 AM
மத்திய அரசில் அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது, தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும், 2021, டிசம்பர் மாதத்துக்குள் செலுத்த வேண்டிய தினசரி சராசரி தடுப்பூசியைக்கூட எட்டவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது, தடுப்பூசி அதிகரிக்கவில்லை” எனத் தெரிவித்து, #வேர்ஆர்வேக்ஸின்ஸ் என்ற ஹேஸ்ட்கை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்த வரைபடம் ஒன்றையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்ட அட்டவணையில் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் 60 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாள்தோறும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக சராசரியாக நாள்தோறும் 34 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன, ஏறக்குறைய 54 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன.
கடந்த சனிக்கிழமை 37லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன, 51 லட்சம் தடுப்பூசி பற்றாக்குறையாகச் செலுத்தப்பட்டது.
ராகுல் காந்தி மற்றொரு ட்விட்டர் பதவில், எதிர்ப்பு எனும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
அதில் மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆக்சிஜன் என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “ மகாத்மா காந்தி கூறுகையில் “ கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமாகக் கூடுதல் ஆகியவை இரு நுரையீரல்போன்றவை. ஒருமனிதன் சுதந்திரமாக ஆக்சிஜனை சுவாசிக்க இவை அவசியமானவை” எனத் தெரிவித்துள்ளதை ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT