Published : 11 Jul 2021 10:43 AM
Last Updated : 11 Jul 2021 10:43 AM
இந்தியாவில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 895 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியி்ட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“ கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 54 ஆயிரத்து 118 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 8 லட்சத்து 37 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில், 1.47 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.20ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 8ஆயிரத்து 40ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 43 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 43 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 37.60 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT