Last Updated : 10 Jul, 2021 04:19 PM

 

Published : 10 Jul 2021 04:19 PM
Last Updated : 10 Jul 2021 04:19 PM

ஜிகா வைரஸ் காற்றில் பரவாது; தேவையற்ற அச்சத்தை பரப்பக் கூடாது: டாக்டர் மேத்யூ வர்கீஸ்

ஜிகா வைரஸ் காற்றில் பரவாது. நோய் பாதித்தவரைத் தொடுவதாலும் கூட தொற்று ஏற்படாது. எனவே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கேரள சுகாதாரத் துறையின் நிபுணர் மருத்துவர் மேத்யூ வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. கொசுக்கடிகளை தவிர்ப்பதன் மூலமே ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்க முடியும்.
கேரள மாநிலத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கேரள மாநில

பொது சுகாதாரத் துறை நிபுணர் மேத்யூ வர்கீஸ் பல தகவலகளைப் பகிர்ந்துள்ளார்.

ஜிகா வைரஸ் காற்றில் பரவாது. நோய் பாதித்தவரைத் தொடுவதாலும் கூட தொற்று ஏற்படாது. இது கொசுக்களால் பரவுகிறது. ஜிகா கரோனாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொற்று நோய். இப்போதைக்கு இதைப்பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. விஷயம், கேரள சுகாதாரத் துறை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் கையில் உள்ளாது. எனவே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது .

சுற்றுலா மையங்களில் சமீப காலமாக மக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. மக்களை அனுமதிக்கலாம். நீண்ட காலம் உள்ளேயே இருந்து மக்கள் அழுத்ததில் உள்ளனர். அவர்களின் மனநலன் கருதி பொது இடங்களில் அனுமதித்தாலும் கூட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவகங்களில் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x