Published : 19 Feb 2016 09:41 AM
Last Updated : 19 Feb 2016 09:41 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி தொடர்பான கொண்டாட்டத்தின்போது, எதிர் பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பலியானார்.
இதுகுறித்து சீதாபூர் மாவட்ட காவல் துறை அதிகாரி உமா சங்கர் சிங் கூறியதாவது:
அமித் ரஸ்தோகி (28) என்பவ ருக்கு திருமணம் நடக்க இருந்தது. இது தொடர்பாக பாரம்பரிய முறைப்படி மணமகள் வீட்டில் புதன் கிழமை இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக மேள தாளம் முழங்க, மணமகனை குதிரை மீது உட்கார வைத்து அழைத்து வந்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் ஒரு பகுதி யாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட, எதிர்பாராதவிதமாக மண மகனின் நெற்றியில் குண்டு பாய்ந் துள்ளது. இதையடுத்து, குதிரையி லிருந்து சரிந்து விழுந்த அவரை உடனடியாக லக்னோ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், கொலையாக இருக்க லாமா என்பது உட்பட வேறு சில கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருமணம் உள்ளிட்ட கொண் டாட்டத்தின்போது துப்பாக்கி பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாரம்பரிய முறைப்படி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது வழக்கமாக உள்ளது. எனினும், இதுபோன்ற விபத்து ஏற்படுவது அரிது.
கடந்த திங்கள்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத் தில் நடந்த திருமண கொண்டாட் டத்தின்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து 14 வயது சிறுவன் பலி யானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT