Published : 07 Jul 2021 06:43 PM
Last Updated : 07 Jul 2021 06:43 PM
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுவருகிறது.
இதுவரை கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ராணே, ராஜ்குமார் சிங், அனுராக்சிங் தாக்கூர், சோனாவால், வீரேந்திரகுமார், அஸ்வினி வைஷவ், பசுபதிகுமார் பாரஸ், மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரகளாகப் பதவியேற்றுள்ளனர்.
அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
உத்தரப் பிரதேசத் தேர்தலை எதிர்நோக்கி புதிய அமைச்சரவையில் பல்வேறு நுணுக்கமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாற்றி அமைக்கப்பட்ட 43 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மீனாட்சி லெகி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யார் அந்த 43 பேர்?
1. ஜோதிர் ஆதித்யா சிந்தியா
2. பூபேந்திர யாதவ்
3. கிரண் ரிஜிஜூ
4. ஹர்தீப்சிங் பூரி,
5. மன்சுக் மாண்டவியா
6. ஜி.கிஷன் ரெட்டி
7. மீனாட்சி லெகி
8. அனுராக் தாக்கூர்
9. சர்பானந்த சோனாவால்
10. பசுபதிகுமார் பராஸ்
11. அனுப்ரியா படேல்
12. டாக்டர் எல்.முருகன்
13. ஷோபா கரந்த்லாஜே
14. அஜய் பாட்
15. நாராயண் தாது ராணே
16. டாக்டர் வீரேந்திர குமார்
17. ராம்சந்திர பிரசாத் சிங்
18. விஸ்வினி வைஷ்னவ்
19. ராஜ் குமார் சிங்
20. புருஷோத்தம் ரூபாலா
21. பங்கஜ் சவுத்ரி
22. டாக்டர் சத்ய பால் சிங் பாகேல்
23. ராஜீவ் சந்திரசேகர்
24. பாணு பிரதாப் சிங் வர்மா
25. தர்ஷன் விக்ரம் ஜார்தோஷ்
26. அன்னபூர்ணா தேவி
27. ஏ.நாராயண்சுவாமி
28. கவுசால் கிஷோர்
29. பி.எல்.வர்மா
30. அஜெய் குமார்
31. சவுகான் தேவ்சின்ஹா
32. பகவந்த் குபா
33. கபில் மோரீஸ்வர் பாட்டீல்
34. பிரதிமா போமிக்
35. டாக்டர் சுபாஷ் சர்க்கார்
36. டாக்டர் பாகவத் கிஷான்ராவ் காரத்
37. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்
38. டாக்டர் பாரதி பிரவின் பவார்
39. பிஷ்வேஸ்வர் துடு
40. சாந்தணு தாக்கூர்
41. டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய்
42. ஜான் பர்லா
43. நிஷித் பிரமானிக்
12 பேர் ராஜினாமா:
முன்னதாக, புதிய அமைச்சரவை அமைய ஏதுவாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
ராஜினாமா செய்தோர் விவரம்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT