Published : 07 Jul 2021 05:07 PM
Last Updated : 07 Jul 2021 05:07 PM
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மீனாட்சி லெகி ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு 43 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமயிலான அரசு பதவி ஏற்றபின் மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமோ அல்லது விரிவாக்கமோ நடக்கவில்லை. இந்நிலையில் அமைச்சர்களின் செயல்பாடு, திறன், மாநிலங்களில் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி விரும்பினார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
புதிய அமைச்சரவைப் பட்டியல் இன்று வெளியாக இருக்கும் நிலையில், நேற்று இரவு புதிதாக கூட்டுறவுத்துறை அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இந்தக் கூட்டுறவு அமைச்சகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாற்றி அமைக்கப்பட்ட 43 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மீனாட்சி லெகி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 43 அமைச்சர்களும் இன்று மாலை பதவி ஏற்கின்றனர், பதவி ஏற்பு விழா முடிந்ததும் பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்திலும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1. ஜோதிர் ஆதித்யா சிந்தியா
2. பூபேந்திர யாதவ்
3. கிரண் ரிஜிஜூ
4. ஹர்தீப்சிங் பூரி,
5. மன்சுக் மாண்டவியா
6. ஜி.கிஷன் ரெட்டி
7. மீனாட்சி லெகி
8. அனுராக் தாக்கூர்
9. சர்பானந்த சோனாவால்
10. பசுபதிகுமார் பராஸ்
11. அனுப்ரியா படேல்
12. டாக்டர் எல்.முருகன்
13. ஷோபா கரந்த்லாஜே
14. அஜய் பாட்
15. நாராயன் தாது ராணே
16. டாக்டர் வீரேந்திர குமார்
17. ராம்சந்திர பிரசாத் சிங்
18. விஸ்வினி வைஷ்னவ்
19. ராஜ் குமார் சிங்
20. புருஷோத்தம் ரூபாலா
21. பங்கஜ் சவுத்ரி
22. டாக்டர் சத்ய பால் சிங் பாகேல்
23. ராஜீவ் சந்திரசேகர்
24. பாணு பிரதாப் சிங் வர்மா
25. தர்ஷன் விக்ரம் ஜார்தோஷ்
26. அன்னபூர்ணா தேவி
27. ஏ.நாராயண்சுவாமி
28. கவுசால் கிஷோர்
29. பி.எல்.வர்மா
30. அஜெய் குமார்
31. சவுகான் தேவ்சின்ஹா
32. பகவந்த் குபா
33. கபில் மோரீஸ்வர் பாட்டீல்
34. பிரதிமா போமிக்
35. டாக்டர் சுபாஷ் சர்க்கார்
36. டாக்டர் பாகவத் கிஷான்ராவ் காரத்
37. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்
38. டாக்டர் பாரதி பிரவின் பவார்
39. பிஷ்வேஸ்வர் துடு
40. சாந்தணு தாக்கூர்
41. டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய்
42. ஜான் பர்லா
43. நிஷித் பிரமானிக்
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பட்டியலினத்தவர்கள் பிரிவில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 2 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவியும், பழங்குடியினர் பிரிவில் 8 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அதில் 3 பேருக்கு கேபினட் அந்தஸ்தும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பின் மோடி அமைச்சரவையில் ஓபிசி பிரிவில் 27 பேர் இருப்பார்கள். இந்த விரிவாக்கத்தில் 13 வழக்கறிஞர்கள், 6 மருத்துவர்கள், 7 குடிமைப் பணி அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT