Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM
திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் ராமாயணத்தின் யுத்த காண்ட பாராயணம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ராவண சம்ஹார நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. அனுமன் வாகனத்தில் ராம அலங்காரத்தில் மலையப்பர் ஒருபுறமும், குதிரை வாகனத்தில் ஸ்ரீநிவாசர் ஒருபுறமும் என அலங்கரிக்கப்பட்டு, ராவண சம்ஹார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று கூறுகையில், ‘‘நீதி, தர்மத்துடன், ஒழுக்கமாக வாழ்ந்த ராமரால்தான், மிக பலசாலியான ராவணனை வீழ்த்த முடிந்தது.
இதேபோல் நாம் அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து, கரோனா வைரஸ் எனும் அரக்கனை முழுவதுமாக ஒழிப்போம்.தேவஸ்தானத்தின் தோட்டக் கலையினர் மிக சிறப்பாக வசந்தமண்டபத்தை அலங்கரித்தனர். விரைவில் பகவத் கீதை சொற்பொழிவும் இங்கு ஆரம்பமாகும். அதில், இறுதியில் விஸ்வ ரூபத்தையும் பிரம்மாண்டமாக செய்வோம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT