Published : 23 Feb 2016 09:27 AM
Last Updated : 23 Feb 2016 09:27 AM
தலைமறைவாகி திரும்பி வந்துள்ள 5 மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துணை வேந்தர் எடுக்க வேண்டும் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 9-ம் தேதி, நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி யில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர் பாக தேச துரோக வழக்கில் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, ராம நாகா, அசுதோஷ் குமார், அனந்த் குமார் ஆகியோர் கடந்த 12-ம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத் திலிருந்து தலைமறைவாயினர்.
இந்நிலையில், உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகம் திரும்பினர். தகவல் அறிந்த காவல் துறையினர், பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே காத் திருக்கின்றனர். அனுமதி இன்றி வளாகத்துக்குள் நுழைய முடியாது என்பதால், மாணவர்கள் முன்வந்து சரணடைவதற்காக காத்திருக் கின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்துக் குள் காவல் துறை நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலை துணை வேந்தர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 5 மாணவர் களுக்கு ஆதரவான நிலைப் பாட்டை, துணை வேந்தர் எடுக்க வேண்டும் என மாணவர் சங்கத் தினரும், பேராசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் சேஹ்ல ரஷித் ஷோரா செய்தி யாளர்களிடம் கூறும்போது, “கும்பலால் தாக்கப்படுவோம் என அஞ்சித்தான் மாணவர்கள் தலை மறைவாக இருந்தனர். தற்போது, நிலைமை ஓரளவு சுமுக நிலைக்குத் திரும்பியிருப்பதால் அவர்கள் திரும்பியுள்ளனர்.
மாணவர்கள் மீதான அனைத்துப் புகார்களையும் திரும்பப் பெறும்படி டெல்லி காவல்துறையை துணை வேந்தர் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
பல்கலைக்கழக நிர்வாகம் இது வரை மாணவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை என மாணவர் தரப்பு தெரிவித்துள்ளது.
“காவல் துறையிடம் மாணவர் களை ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்பை எங்களிடம் அளிக்க முனைந்தால், அதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்” என ஷோரா தெரிவித்துள்ளார்.
ஜேஎன்யூ ஆசிரியர் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், “ விசாரணைக் குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பிறகே, பல்கலைக்கழகத்தின் உட்செயல்பாடுகள் அனுமதிக் கப்பட வேண்டும். விசாரணைக் குழு முன் மாணவர்கள் ஆஜராக உகந்த சூழலை பல்கலைக்கழகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT