Published : 30 Jun 2021 10:12 AM
Last Updated : 30 Jun 2021 10:12 AM
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா BSBD வங்கி கணக்குகளில் ஏடிஎம் அல்லது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளைமுதல் அமலுக்கு வருகிறது.
பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு இருந்த சலுகைகளைக் குறைக்கவும் சேவை கட்டணங்களையும் அதிகரிக்க நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.BSBD கணக்குகளுக்குப் பொதுவாகவே ஜீரோ பேலென்ஸ் கணக்குகள் ஆகும். இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளதாவது:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் BSBD வங்கிகணக்குகளில் எஸ்பிஐ ஏடிஎம்கள் அல்லது கிளைகளில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5-வது பரிவர்த்தனை முதல் சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
இந்த வகை வங்கி கணக்குகளில் வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தை பெற 40 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால் 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
ஏடிஎம் இயந்திரத்தில் பாஸ்வோர்டு மாற்றுவது போன்ற நிதியல்லாத சேவைகளுக்கு கட்டம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவச நிதியற்ற சேவைகளுக்கு எவ்விதமான மாற்றமும் இல்லை. உதாரனாக ஏடிஎம் இயந்திரத்தில் பாஸ்வோர்டு மாற்றுவது போன்றது.
மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகத்திற்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை நாளை முதல் (ஜூலை 1-ம் தேதி முதல்) அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT