Published : 29 Jun 2021 06:11 AM
Last Updated : 29 Jun 2021 06:11 AM
லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் படைவீரர்களை குவிக்கிறது.
லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீனா ராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, எல்லையில் பதற்றம் நிலவியதால் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. பின்னர், படைகள் குறைப்பு தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் பல சுற்று பேச்சுகள் நடந்து ஓரளவு படைகள் குறைக்கப்பட்டன. எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள் ளப்படவில்லை. சீன எல்லையில் இப்போது 2 லட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடுதலாக மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சீனாவும் படைகளை குவித்து வருகிறது. எந்த எண்ணிக்கையில் தங்கள் நாட்டு ராணுவத்தினரை சீனாகுவித்துள்ளது என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும்,கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், நமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே இந்தியாவும் கூடுதலாக படைகளை குவித் துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT