Published : 01 Dec 2015 09:47 AM
Last Updated : 01 Dec 2015 09:47 AM

சித்தூர் மேயர் தம்பதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

சித்தூர் மாநகராட்சி மேயர் அனு ராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி யாக கருதப்படும் சின்ட்டு என்கிற சந்திரசேகர், நேற்று காலை சித்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அனுராதாவும் அவரது கணவர் மோகனும் கடந்த 17-ம் தேதி, சித்தூர் மாநகராட்சி அலுவலகத் தில் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக சம்பவ நாளன்றே 3 பேர் போலீஸில் சரணடைந்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப் படும், கட்டாரி மோகனின் அக்காள் மகன் சின்ட்டு என்கிற சந்திரசேகர் மற்றும் பிறரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸ் நேற்று காலை செய்தி யாளர்களிடம் பேசும்போது, “மேயர் தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய முருகா, பரந்தாமன், ஹரிதாஸ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். இதுவரை இவ்வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் சின்ட்டு, நேற்று காலை சித்தூர் 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதை அறிந்த கட்டாரி மோகனின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்றம் முன் திரண்டு, சின்ட்டுவை தூக்கி லிட வேண்டும் என கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி சந்திரசேகரை போலீஸார் கடப்பா சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x