Published : 26 Jun 2021 08:53 AM
Last Updated : 26 Jun 2021 08:53 AM
வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள இணக்கங்களுக்கான கடைசி தேதிகளை அரசு மேலும் நீட்டித்துள்ளது. கோவிட்-19 சிகிச்சைக்கான செலவு மற்றும் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட இறப்புக்கு பெறப்பட்ட உதவித் தொகைக்கான வரி விலக்கையும் அது அறிவித்துள்ளது.
கோவிட்-19 சிகிச்சைக்கு ஏற்பட்ட செலவுகளை எதிர்கொள்வதற்காக தங்களது நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து நிதி உதவியை வரி செலுத்துவோர் பலர் பெற்றிருக்கின்றனர். நிதி ஆண்டு 2019-20 மற்றும் அதை தொடர்ந்து வரும் வருடங்களில் இவ்வாறு பெறப்பட்ட பணத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகள் நிதி உதவியை வழங்கி உள்ளார்கள். நிதி ஆண்டு 2019-20 மற்றும் அதை தொடர்ந்து வரும் வருடங்களில் இவ்வாறு பெறப்பட்ட பணத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காரணமாக வரி செலுத்துவோர் வரி இணக்கங்களை மேற்கொள்வதில் சிரமங்களை சந்திப்பதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி இணக்கங்களுக்கான கடைசி தேதிகளை அரசு மேலும் நீட்டித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT