Published : 25 Jun 2021 11:41 AM
Last Updated : 25 Jun 2021 11:41 AM
ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவக்காற்று மெதுவாக முன்னேறும் என்பதால் நீடித்த மழைக்கு சாதகமாக இல்லை என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:
தென்மேற்கு பிஹார், தென்கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ உயரத்தில் புயல் சுழல் உள்ளது.
இந்த புயல் சுழலில் உள்ள காற்றழுத்தம், தென்மேற்கு பிஹார், தென்கிழக்கு உத்தரப் பிரதேசம், தெற்கு சத்தீஸ்கர், ஜார்கண்ட், தெற்கு கடலோர ஆந்திர வரை கடல் மட்டத்தில் இருந்து 1.5 கி.மீ உயரம் வரை காணப்படுகிறது.
புயல் சுழற்சியில் கிழக்கு, மேற்கு காற்றழுத்தம் ஜார்கண்ட் முதல் வடக்கு குஜராத் வரையும், வடக்கு சத்தீஸ்கரில் இருந்து தெற்கு மத்தியப் பிரதேசம் வரையும் கடல் மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ தொலைவில் காணப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர்) கூடிய மழை, ஹரியாணா, சண்டிகர் மற்றும் டெல்லியில் ஒரு சில பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்) கூடிய மழை, ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட்-பல்திஸ்தான், முசாபர்பாத், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரு சில பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர்) கூடிய மழை பெய்க்கூடும்.
கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா அருணாச்சலப் பிரதேசம், அசாம் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், தெலங்கானா ராயலசீமா, கேரளா, மாஹே, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சூறைக்காற்றுடன் கூடிய மழை மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் பெய்யக்கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான பலத்த காற்று தென்மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரேபிய கடல், குஜராத் கடற்கரை பகுதி, மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் ஆந்திரப்பிரதேச கடலோர பகுதிகளில் வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT