Published : 26 Dec 2015 09:16 AM
Last Updated : 26 Dec 2015 09:16 AM
திருப்பதி ஏழுமலையானை நேற்று மாலை குடியரசு தலைவர் பிர ணாப் முகர்ஜி தரிசனம் செய்தார். அவருடன் ஆந்திர ஆளுநர் நர சிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் வந்தனர்.
ஹைதராபாதில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் கடந்த ஒரு வாரமாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை விமானம் மூலம் திருப்பதி வந்த குடியரசு தலைவரை ஆந்திர மாநில அமைச்சர்கள், தேவஸ் தான அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இவ ருடன் ஆந்திரா-தெலங்கானா மாநி லங்களின் ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் உடன் வந்த னர். பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் சாலை மார்க்க மாக திருமலைக்கு சென்றார். அங்கு அவரை தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சற்று நேர ஓய்வு எடுத்த பிரணாப் முகர்ஜி, அதன் பின்னர் சம்பிரதாய உடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க சென்றார்.
முதலில் கோயில் குளம் அருகே உள்ள வராக சுவாமியை தரி சித்த பிரணாப், பின்னர் அங்கி ருந்து ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். முகப்பு கோபுர வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு சுவாமி தரிசன ஏற்பாடு கள் செய்யப்பட்டன. பின்னர் ரங்க நாயக மண்டபத்தில் தீர்த்த பிர சாதங்களும் சுவாமியின் நினைவு படங்களும் வழங்கி கவுரவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து அவர் திருமலையில் இருந்து மீண்டும் திருப்பதி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹை தராபாத் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலை ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆயபீமாவரம் பகுதி யில் திருமலை-திருப்பதி தேவஸ் தானம் சார்பில் ரூ. 6 கோடி செல வில் கட்டப்பட்ட வேத பாட சாலையை தொடங்கி வைத்து பேசினார் அப்போது “வேதங்கள் நமது நாட்டின் கலாச்சாரம். பல நூற் றாண்டுகளாக வேத பாடசாலைகள் நமது நாட்டில் உள்ளன. அவை உலகுக்கு அமைதியை கற்று தரும் வல்லமை படைத்தவை” என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT