Published : 19 Jun 2021 05:23 AM
Last Updated : 19 Jun 2021 05:23 AM
இந்திய மண்ணின் சட்ட விதிமுறைகள்தான் மேலானது. நிறுவன கொள்கைகள் அல்ல என்று ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட ட்விட்டர் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் கேள்வியெழுப்பி உள்ளனர்.
``முக்கியமான கொள்கை முடிவுகளை எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள். அதற்கு மேலான அதிகாரம் ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்று நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியதோடு, இதற்கான பதிலை அளிக்க வலியுறுத்தினர்.
நிலைக்குழு முன்பாக ட்விட்டர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவதை எவ்விதம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் விவரிக்க வேண்டும் என்றும் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் உள்ளார். இக்குழு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தவறாக செயல்பட்டதற்காக சம்மன் அளிப்பியுள்ளது. குடிமக்களின் உரிமைகளைக் காக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில், ட்விட்டர் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்
பட்டன. ட்விட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளில் விதிமுறைகளை மீறியுள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றது.
செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையின்போது எத்தனை ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன என்ற விவரத்தைத்தெரிவிக்குமாறு குழுவில் இடம்பெற்றிருந்த பாஜக உறுப்பினர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT