Published : 10 Jun 2021 09:08 AM
Last Updated : 10 Jun 2021 09:08 AM

உலக தர வரிசை: 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை

மும்பை- ஐஐடி

புதுடெல்லி

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியல் 2022-ல், 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலகளவில் முதலாவது இடத்தில் பெங்களூர் ஐஐஎஸ்சி உள்ளது.

உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப்பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18வது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று வெளியிட்டது.

இதில் மும்பை ஐஐடி 177வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186வது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கு மத்திய கல்வி அமைச்சர்

ரமேஷ் பொக்ரியால்

பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் திரு பொக்கிரியால் கூறியதாவது:

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோக்கி சென்று விஷ்வகுருவாக மாறிவருகிறது. இந்திய கல்வித்துறையுடன் தொடர்புடைய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர தரப்பினர் பற்றி ரதமர் நரேந்திர மோடி எப்போதும் எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறா்.

தேசிய கல்விக்கொள்கை 2020 போன்ற முயற்சிகள் தான், நமது கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை சர்வதேச அளவில் இடம்பெற செய்கின்றன. இதை க்யூஎஸ் மற்றும் டைம்ஸ் குரூப் வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலை பார்த்து உணர முடியும்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x