Last Updated : 11 Dec, 2015 11:33 AM

 

Published : 11 Dec 2015 11:33 AM
Last Updated : 11 Dec 2015 11:33 AM

மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுரை

பெண்களை சூனியக்காரிகளாக, பேய் ஓட்டுபவர்களாக சித்தரிக்காதீர்



*



நெடுந்தொடர்களில் பெண்களை சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராக சித்தரிப்பதை தொலைக்காட்சி சேனல்கள் நிறுத்திக் கொள்ளுமாறு ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஜீ, கலர்ஸ், சன், மா போன்ற தொலைக்காட்சிகளில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் சில நெடுந்தொடர்களில் பெண்கள் சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராக சித்தரிக்கப்படுவதாக ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலுக்கு சில புகார்கள் வந்துள்ளன.

நேயர்கள் புகாரின் அடிப்படையில் இனி நெடுந்தொடர்களில் பெண்களை சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராக சித்தரிப்பதை தொலைக்காட்சி சேனல்கள் நிறுத்திக் கொள்ளுமாறு ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்குமே இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவித்துள்ள ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில், "தொலைக்காட்சி நேயர்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து ஜீ, கலர்ஸ், சன், மா போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில நெடுந்தொடர்களை ஆராய்ந்தோம். மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள், பெண்களை சூனியக்காரிகளாக, பேய் ஓட்டுபவர்களாக தவறாக சித்தரிக்கும் நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அந்த சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இருப்பினும் அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்குமே இந்த உத்தரவு பொருந்தும்" எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலின் தலைவர் முகுல் முட்கல் தி இந்துவிடம் (ஆங்கில நாளிதழ்) கூறும்போது, "மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன" என்றார்.

ஏற்கெனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா சேனல்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் மேலும் ஒரு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் உத்தரவின் விவரம்:

"தொலைக்காட்சி சேனல்களின் கருத்தாக்கச் சுதந்திரத்தை இந்த கவுன்சில் மதிக்கிறது. இருப்பினும் மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த கவுன்சில் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

கதைக்கருவுக்கு தேவைப்படுவதால் அத்தகைய சித்தரிப்புகளை அனுமதிக்கும் பட்சத்தில் சேனல்கள் பொறுப்புத் துறப்பு வாசகங்களையும் சேர்த்து ஒளிபரப்ப வேண்டும். அதாவது நெடுந்தொடரில் காண்பிக்கப்படும் மூடநம்பிக்கை காட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

மேலும், தொடருக்கான கதை முழுக்க முழுக்க சூனியம் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய தொடர்களை அதிகப்படியான பொதுமக்கள் டிவி பார்க்கும் பிரைம் டைமை தவிர்த்துவிட்டு இரவு 11 மணிக்கு மேலேயே ஒளிபரப்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது

இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 51 (ஏ)-வில் நாட்டு மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதை ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் மேற்கோள் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x