Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
கரோனா 2-வது பரவலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேசம் அதிலிருந்து மீளத் துவங்கிஉள்ளது. இதன் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டன. அதேசமயம், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் வேகம் எடுக்கவில்லை. இதற்கு அதன் பலமாவட்டங்களின் பல்வேறு கிராமவாசிகள் மற்றும் நகரின் சில பகுதிகளில் வாழும் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளத் தயங்குவது காரணமாகி விட்டது.
தடுப்பூசி செலுத்திய பின் வேறு பல காரணங்களால் இறந்தவர்கள் பற்றிய தவறானக் கருத்துகள் பரப்பப்படுகின்றன. இவற்றுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் காரணமாக உள்ளன. இவர்களை சமாளிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை ஏற்று உபியின் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு வகை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும், இவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையிலும்,அதிகாரப்பூர்வமாக அறிவிக்காம லும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில்ஒன்றாக பரூகாபாத்தின் கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ரேஷனில்உணவுப் பொருட்கள் அளிப்பதில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.
இம்மாவட்ட முனிசிபல் சார்பிலான அறிவிப்பால் பரூகாபாத்தில் சர்ச்சைகள் எழுந்தன. அதன் பிறகு இதை மறுத்த முனிசிபல் நிர்வாகம், அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது.
இதைவேறு வகையில் கையாள்கிறது புலந்த்ஷெஹர் மாவட்டக் காவல்துறை. இதன் நகர்ப்புறவாசிகளில் பலரும் கூட தடுப்பூசி செலுத்திக் கொள் வதில்லை.
எனவே, அவர்களுக்காக காவல்துறை சார்பில் தெருக்களில் கைஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்படுகிறது. இதில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்துகடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் எச்சரிக்கப்படுகிறது. கடைகளிலும் தடுப்பூசிசெலுத்தாத அதன் உரிமையாளர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பப்பட மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.
மிர்சாபூரின் மக்களவை எம்.பி.யும், பாஜக கூட்டணியின் உறுப்பினருமான அப்னா தளம் (எஸ்) கட்சியின் தலைவி அனுப்பிரியா பட்டேலும் ஒரு அறிவிப்பு செய்துள்ளார். அதில், தனது தொகுதியில் உள்ள கிராம வாசிகள் நூறு சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தினால் அந்த கிராமங்களின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் நகலை மிர்சாபூரின் ஆட்சியருக்கும் அனுப்பி பஞ்சாயத்துக்களிடம் பேசும்படியும் கோரியுள்ளார்.
இதுபோல், தடுப்பூசி செலுத்தத் தயங்குவதில் இந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளனர். இத னால், முஸ்லிம்களை சமாளிக்கமதுரா, எட்டாவா ஆகிய மாவட்ட நிர்வாகம் தன் கிராம மசூதிகளின் இமாம்களின் உதவிகளை நாடியுள்ளனர்.
தொழுகைக்கான அசான் எனும் பாங்கை ஒலிக்கப் பயன் படும் ஒலிபெருக்கிகள் வாயிலாகக் கரோனா விழிப்புணர்வை அளிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT