Published : 06 Jun 2021 09:56 AM
Last Updated : 06 Jun 2021 09:56 AM
இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து தினசரி பாதிப்பு கடந்த 58 நாட்களுக்கு பிறகு 1,14,460 குறைந்துள்ளது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,460 ஆக உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,88,09,339
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,14,460
இதுவரை குணமடைந்தோர்: 2,69,84,781
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,89,232
கரோனா உயிரிழப்புகள்: 3,46,759
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2677
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 14,77,799
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 23,13,22,417
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 36,47,46,522பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,36,311 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT