Published : 04 Jun 2021 03:21 PM
Last Updated : 04 Jun 2021 03:21 PM

மத்திய அரசுக்கு அலபன் பண்டோபாத்யா பதில்; விரைவில் உள்துறை நடவடிக்கை?

புதுடெல்லி

பிரதமர் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் நோட்டீஸுக்கு மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாள்ர அலபன் பண்டோபாத்யா பதில் அனுப்பியுள்ளார்.

யாஸ் புயலால் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கொல்கத்தாவில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர்.

மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாவை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால் அவரை அனுப்பி வைக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜ மறுத்து விட்டார். இதனிடையே அவர் ஓய்வு பெற்றார். அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்து பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதன் விவரங்கள் வெளியாகவில்லை.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அதனடிப்படையில் அலபன் பண்டோபாத்யா மீது விரைவில் நடவடிக்கை இருக்கலாம் எனத் தெரிகிறது. மத்திய அரசு விரைவில் நடவடிக்கை குறித்து அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x