Last Updated : 29 May, 2021 03:14 PM

 

Published : 29 May 2021 03:14 PM
Last Updated : 29 May 2021 03:14 PM

ஜூன் 1 முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்கிறது

வரும் ஜூன் 1 முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமானக் கட்டணம் உயர்கிறது. அடிப்படைக் கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 40 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல ரூ. 4,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

பயண தூரத்தின் அடிப்படையில், 90-120 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க ரூ. 4,700, 150-180 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க ரூ.6,100, 180-210 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க ரூ.7,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இனி, டெல்லியிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்க தற்போது செலுத்துவதைவிடக் கூடுதலாக ரூ.700 செலவழிக்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதே இந்தக் கட்டண உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடைசியாக பிப்ரவரி 2021ல் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச அதிகபட்ச வரையறைகளை மாற்றியமைத்தது.

அப்போது 10 முதல் 13 சதவீதம் வரை விலையேற்றம் இருந்த நிலையில் மூன்றே மாதங்களில் மீண்டும் கட்டணம் 13 முதல் 16% வரை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x