Published : 06 Dec 2015 12:25 PM
Last Updated : 06 Dec 2015 12:25 PM
வெள்ளத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களின் 13,282 மொபைல் டவர்கள் செயல் இழந்துள்ளன.
இத்தகவல் மத்திய தகவல் தொடர்புத் துறையிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் மொபைல் போன் டவர்கள் செய லிழந்தன. மொபைல் போன் நிறுவனங்களின் செயலகங்கள் (எக்ஸ்சேஞ்சுகள்) பாதிக்கப்பட்டு, பல்வேறு உபகரணங்களும் பழுதடைந்தன. இதனால், சென்னையில் பெரும்பாலான மொபைல் போன்கள் இயங்காமல் முடங்கின. இவற்றில் ஏற்பட்ட கோளாறு டிசம்பர் 4-ம் தேதி வரை ஓரளவே சரிசெய்யப்பட்டது. இதன் மீதான அறிக்கை மத்திய தொலைத்தொடர்பு அமைச் சகத்துக்கு இத்துறையின் சென்னை அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிஎஸ்என்எல், ஏர்செல், ஏர்டெல், ஐடியா, வோடபோன், ரிலையன்ஸ், எஸ்எஸ்டிஎல், டிடிஎஸ்எல் ஆகிய நிறுவனங்களின் மொபைல் சேவையின் நிலை குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதன் நகல் டெல்லி தொலைத்தொடர்புத் துறை வட்டாரம் மூலமாக ‘தி இந்து’வுக்கு கிடைத்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, பெரும்பாலான டவர்கள் மின்சாரத் தடையால் செயல் இழந்துள்ளன. ஏர்செல் மற்றும் டிடிஎஸ்எல் ஆகிய நிறுவனங்களின் பெரும்பாலான மொபைல் டவர்கள் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் செயல் இழந்துள்ளன. மற்ற நிறு வனங்களின் டவர்கள் எத்தனை மாவட்டங்களில் செயல்படவில்லை என குறிப்பிடப்படவில்லை.
இதில் பிஎஸ்என்எல் நிறு வனத்தின் 2,665 டவர்களில் 600 டவர்கள் செயல் இழந் துள்ளன. பிஎஸ்என்எல் நிறு வனத்தின் பாதிக்கப்பட்ட 284 எக்ஸ்சேஞ்சுகளில் இரண்டு பெரிய எக்ஸ்சேஞ்ச், ஒரு ரிமோட் ஸ்விட்சிங் யூனிட் ஆகியவை மட்டும் டிசம்பர் 4-ம் தேதி வரை சரிசெய்யப்பட்டுள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் 7,459 டவர்களில் 4001 டவர்கள் பாதிக்கப்பட்டன. இதில் 343 டவர்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதன் பாதிக்கப்பட்ட ஒரு எக்ஸ்சேஞ்ச் டிசம்பர் 4 வரை சரிசெய்ய முடியாமல் உள்ளது. ஐடியாவின் 1800 டவர்களில் 1519, ரிலையன்ஸின் 1405 டவர்களில் 1138, ஏர்செல்லின் 3488 டவர்களில் 2105, எஸ்எஸ்டிஎல் நிறுவனத்தின் 145 டவர்களில் 120, டிடிஎஸ்எல் நிறுவனத்தின் 2268 டவர்களில் 2130 டவர்கள் செயல்படாமல் முடங்கின. வோடபோனின் 1669 டவர்கள் செயல்படவில்லை.
எக்ஸ்சேஞ்சுகளில் ஏர்டெல்- 1, வோடபோன்- 2, ஏர்செல்- 7, டிடிஎஸ்எல் - 4 ஆகியவை பழுதடைந்தன. இதில் டிடிஎஸ்எல் நிறுவனத்தின் 3 மற்றும் வோடபோனின் 1 எக்ஸ்சேஞ்ச் டிசம்பர் 4-ல் சரி செய்யப்பட்டு விட்டன. இதுவன்றி, டிசம்பர் 4-ம் தேதி, அனைத்து நிறுவனங்களின் 8040 டவர்கள் இயங்கும் நிலையில் இருந்தன.
அனைத்து நிறுவனங்களும் எடுத்த சில அவசரகால நடவடிக்கை குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், “இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் தொழில்நுட்ப உதவியால் மொபைல் தொடர்புக்கு முயற்சிக் கப்பட்டுள்ளது.
விஎஸ்ஏடி உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT