Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM
கரோனா தொற்றை குணப்படுத்தும் மூலிகை மருந்தின் சூத்திரம் கேட்டு அதிகாரிகள் மிரட்டுவதாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர் புகார் மனு அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், நெல்லூர், கிருஷ்ணப்பட்டினத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யா. இவரது மூலிகை மருந்து கரோனா தொற்றை குணப்படுத்துவதாக செய்தி பரவியதால், ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டினத்தில் கூடினர். இதனால் தொற்று மேலும் பரவும் ஆபத்துஏற்பட்டுள்ளதாகக் கூறி மருந்து விநியோகத்தை ஆந்திர அரசு நிறுத்தியது. இதற்கு எதிராக சிலர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின் பேரில் ஆனந்தய்யாவின் மருந்தை, ஆயுஷ் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து, இதில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என அறிவித்தனர்.
எனினும் உரிய பரிசோதனைக்கு பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது. இதன்பேரில் திருப்பதி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயர் நீதி மன்றத்தில் ஆனந்தய்யா தாக்கல் செய்த புகார் மனுவில், “அரசு அதிகாரிகள் என்னை ரகசிய இடத்
துக்கு அழைத்து சென்று, கரோனா மருந்து சூத்திரத்தை கூறும்படி மிரட்டுகின்றனர். நான் அந்த மருந்தை மக்களுக்கு இலவசமாக
வழங்கி வந்தேன். மருந்தை ஆய்வு செய்வதாக கூறி அரசு தாமதப்படுத்துகிறது. அந்த மருந்தை விரைவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால், என்னால் முடிந்த அளவு மருந்து தயாரித்து மக்களுக்கு இலவச மாக வழங்குவேன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT