கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்கள் வீதம் 89.26% ஆக உயர்வு

கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்கள் வீதம் 89.26% ஆக உயர்வு
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 89.26% ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் 40 நாட்களுக்குப் பிறகு இரண்டு லட்சத்திற்கு கீழ் குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 1,96,427 ஆக பதிவாகியுள்ளது.

கோவிட் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 25,86,782 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 1,33,934 சரிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 9.60% ஆகும்.

12-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,850 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,40,54,861 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 89.26% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20,58,112 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33,25,94,176 பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினசரி தொற்று உறுதி வீதம் 9.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 28,41,151 முகாம்களில் 19,85,38,999 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் 18-44 வயதுப் பிரிவில் 12.82 லட்சம் பயனாளிகளுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட மூன்றாவது கட்டத்தில், இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in