Published : 23 May 2021 05:37 AM
Last Updated : 23 May 2021 05:37 AM

கட்டாய மதமாற்ற தடை சட்டம்: குஜராத் ஆளுநர் ஒப்புதல்

அகமதாபாத்

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு குஜராத் மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரா கண்ட், மத்தியபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங் களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத் தின்படி 10 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

தற்போது அந்த மாநிலங்களைப் பின்பற்றி கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு குஜராத் மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி குஜராத் மதச் சுதந்திர மசோதா-2021 தயார் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத்தின், ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மசோதாவைப் பரிசீலித்த ஆளுநர், கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலை குஜராத் மாநில பேரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா தெரி வித்தார்.

இந்த மசோதாவின்படி, ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ அல்லது கட்டாய மாக மதம் மாற்றுவதற்கு துணை புரிந்தாலோ குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர் 18 வயதுக் குட்பட்டவராக இருந்தாலோ, தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலோ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு அமைப்பு இந்த குற்றத்தைப் புரிந்தால், அந்த அமைப்பின் பொறுப்பாளருக்கு 3 ஆண்டுமுதல் 10 ஆண்டு வரை சிறைத்
தண்டனை விதிக்கப்படும்.

விரைவில் சட்டம்

இதுகுறித்து அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா கூறும்போது, “விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை பேரவையில் கொண்டு வரவுள்ளோம். லவ் ஜிகாத் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். வரும் காலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவோம்”என்று தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x