Last Updated : 21 May, 2021 03:26 PM

60  

Published : 21 May 2021 03:26 PM
Last Updated : 21 May 2021 03:26 PM

கரோனா நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது: கண்கலங்கிய பிரதமர் மோடி

கரோனா வைரஸ் நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என்று உடைந்த குரலில் கண்ணீர் மல்க தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தாக்கம் நிலவிவருகிறது. இந்நிலையில், பிரதமர் இன்று கரோனா இரண்டாவது அலை தொடர்பாக தனது சொந்த தொகுதியான வாரணாசியின் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: கரோனா இரண்டாவது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வைரஸ் நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கரோனாவிற்கெதிரான நமது தற்போதைய போரில், கருப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இது நாம் பதட்டமில்லாமல் இருக்கும் தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x