Published : 20 May 2021 09:16 AM
Last Updated : 20 May 2021 09:16 AM

கோவிட்-19 அத்தியாவசிய மருந்துகள்; விநியோகத்தையும் கண்காணிக்க நடவடிக்கை: மத்திய அரசு

புதுடெல்லி

கோவிட்-19 அத்தியாவசிய மருந்துகள் ஒவ்வொன்றின் விநியோகத்தையும் மத்திய அரசு கண்காணிப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிட்-19 மேலாண்மையில் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. இவற்றின் உற்பத்தி மற்றும் இறக்குமதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. விநியோகம், தேவை, மலிவான விலை ஆகிய மும்முனை உத்திகளை அமல்படுத்தி, இந்த மருந்துகள் கிடைப்பதை மத்திய அரசு கண்காணிக்கிறது.

திட்டமிடப்பட்ட மருந்துகள்:

1. ரெம்டெசிவிர்

2. ஏனாக்ஸாபரின்

3. மெதைல் பிரெட்னிசோலோன்

4. டெக்ஸாமெதாசோன்

5. டோசிலிசுமாப்

6. ஐவர்மெக்டின்

திட்டமிடாத மருந்துகள்:

7. ஃபாவிபிராவிர்

8. ஆம்போடெரிசின்

9. அபிக்சமாப்

மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) மற்றும் தேசிய மருந்து விலை ஆணையம் (என்பிபிஏ) ஆகியவை மருந்து உற்பத்திகளை அதிகரிக்க உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இருப்பு நிலவரம், தற்போதைய திறன், மே மாதத்துக்கான தயாரிப்பு ஆகிய தரவுகளை பெற்று வருகின்றன.

1. ரெம்டெசிவிர்:

* இதன் உற்பத்தி ஆலைகள் 20-லிருந்து 60-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 நாட்களில் மருந்து கிடைப்பது 3 மடங்கு அதிகரித்துள்ளது.

* இதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 10 லட்சம் குப்பிகளாக இருந்த இதன் உற்பத்தி மே மாதத்தில் 1 கோடி குப்பிகளாக அதிகரித்துள்ளது.

2. டோஸ்சிலிசுமாப் ஊசி:

* இதன் இறக்குமதி 20 மடங்கு அதிகரிக்கப்பட்டதன் மூலம் இந்த மருந்து தற்போது நம் நாட்டில் கிடைக்கிறது.

3. டெக்ஸாமெதாசோன் 0.5 மி.கி மாத்திரைகள்:

* இதன் உற்பத்தி ஒரு மாதத்தில் 6 முதல் 8 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

4. டெக்ஸாமெதாசோன் ஊசி:

* இதன் உற்பத்தி சுமார் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

5. ஏனாக்ஸாபரின் ஊசி:

* இதன் உற்பத்தி ஒரு மாதத்தில் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

6. மெத்தில் பிரெட்னிசோலோன் ஊசி:

* ஒரு மாதத்தில் இதன் உற்பத்தி, 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

7. ஐவர்மெக்டின் 12 மி.கி மாத்திரை

* இதன் உற்பத்தி ஒரு மாதத்தில், 5 மடங்கு அதிகரிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 150 லட்சமாக இருந்த மாத்திரைகள், மே மாதம் 770 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

8. ஃபவீர்பிரவீர்:

* நெறிமுறை பட்டியலில் இல்லாத மருந்து. ஆனால், இது வைரஸ் பாதிப்பை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

* இதன் உற்பத்தி ஒரு மாதத்தில் 4 மடங்கு அதிகரிக்கப்படுகிறது.

* கடந்த ஏப்ரல் மாதம் 326.5 லட்சமாக இருந்த இதன் உற்பத்தி மே மாதத்தில் 1644 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

9. ஆம்போடெரெசின் பி ஊசி:

* இதன் உற்பத்தி ஒரு மாதத்தில் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

* 3.80 லட்சம் குப்பிகள் தயாரிப்பில் உள்ளன.

* 3 லட்சம் குப்பிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன

* மொத்தம் 6.80 லட்சம் குப்பிகள் நாட்டில் கிடைக்கும்.
இந்த அத்தியாவசிய மருந்துகள் ஒவ்வொன்றின் விநியோகத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x