Published : 18 May 2021 12:05 PM
Last Updated : 18 May 2021 12:05 PM
கரோனா வைரஸ் 2-வது அலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடுமுழுவதும் இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ஜெயலால் கூறியதாவது:
கரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி இதுவரை நாடுமுழுவதும் 270 மருத்துவர்கள் உயிரிழந்னர். இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும் பிரபல மருத்துவரான கே.கே.அகர்வால் நேற்று கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
மிக இளவயதில் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது அனாஸ் முஜாகித் கடந்த 9-ம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
மருத்துவர்களில் உயிரிழந்தவர்களில் வயதானவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் மருத்துவர் சத்தியமூர்த்தி தனது 90 வயதில் உயிரிழந்தார்.
அதிகபட்சமாக பிஹார் மாநிலத்தில் 69 மருத்துவர்கள் இதுவரை கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 37 மருத்துவர்கள், டெல்லியில் 29 பேர், ஆந்திராவில் 22 ேபர் உயிரிழந்தனர். கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2-வது அலை முடிவதற்குள் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் 2-வது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு ேமற்பட்டவர்கள். முதல் அலையைவிட, கரோனா 2-வது அலை மிகவும் மோசாக இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT