Published : 17 May 2021 07:45 AM
Last Updated : 17 May 2021 07:45 AM
பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லியில் பல்ேவறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 25க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்ததற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியது குற்றமா, எங்களையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களின் ப்ரோஃபைல் படத்தையும் மாற்றியுள்ளனர்.
டெல்லியில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. "நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்" என்று கேள்வி எழுப்பி சுவரொட்டிகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸார் இதுவரை 20க்கும் மேற்பட்ட முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்து 25 பேரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோல் போலீஸார் கைது செய்துவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு எதிராக கேள்வி எழுப்பி ஒட்டப்பட்ட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நேற்று பகிர்ந்தார், அதில் “ என்னையும் கூட கைது ெசய்யுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில் “ டெல்லியின் பல்வேறு சுவர்களில் நான்தான் சுவரொட்டிகளை ஒட்டினேன். என்னைக் கைது செய்ய பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் துணி்ச்சல் இருக்கிறதா.
பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியது குற்றமா. இந்தியா மோடி பீனல் கோட் மூலம்தான் இயங்குகிறதா. கரோனா தொற்றின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம் போலீஸாருக்கு வேறு வேலையில்லையா. நான் என்வீட்டு சுவற்றில் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டுவேன் என்னை கைது செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின்செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களிடம் கூறுகையில் “ இந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி, மருந்துகள், ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் பிரதமரை நோக்கி கடுமையான கேள்விகள் கேட்போம். உங்களுக்கு சவால் விடுகிறேன் என்னைக் கைது செய்யுங்கள். என்னுடைய தடுப்பூசி எங்கே, எனக்குரிய ஆக்சிஜன் எங்கே. தொடர்ந்து நாங்கள் கேள்விகள் கேட்போம்.
பெரும்பாலன மக்களின் இறப்பை தவிர்த்திருக்க முடியும். மக்கள் கரோனாவில் உயிரிழக்கவில்லை, கரோனாவை சரியாகக் கையாளத் தெரியாதநிர்வாகத்தால் இறந்தார்கள். மத்திய அரசு இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை. தடுப்பூசிக்கு குருவா மாற மோடி விரும்பினார், ஆனால், இப்போது ஒட்டுமொத்த உலகமும், ஒவ்வொரு இந்தியரும் கடினமான கேள்வி கேட்கிறார்கள்.
இவ்வாறு பவன்கேரா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT