Published : 16 May 2021 02:25 PM
Last Updated : 16 May 2021 02:25 PM
ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை கண்டறிய எந்த நேரத்தில் பரிசோதனை எடுக்கலாம், எப்போது எடுத்தால் கரோனா பாதிப்பு தெரிய வரும் என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் முறையாதான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, சில நேரங்களில் சிடி ஸ்கேன்மூலம் தொற்று கண்டறியப்படுகிறது.
ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால், அவருடன் பழகியவர்களும் பதற்றப்பட்டு அடுத்தநாளே கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று முடிவு வந்து நிம்மதி அடைகிறார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் அறிகுறிகள் இருந்தாலும் தாங்கள்தான் கரோனாபரிசோதனை செய்துவிட்டோமே, மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டுமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.
ஒருவருக்கு எந்த நேரத்தில் கரோனா பரிசோதனை செய்தால் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும் என்பதை மருத்துவர் விளக்கியுள்ளார். டெல்லியில் பிரபல டாக்டர் லால் பாத் லேப் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் அரவிந்த் லால் அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:
கரோனா பரிசோதனை எந்த நேரத்தில் எடுத்தால் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் வரும் என்பதில் குழப்பம் இருக்கிறது. பொதுவாக அனைத்து மருத்தவர்களும் கரோனா பரிசோதனை எடுக்க ஆர்டிபிசிஆர் முறையையே 70 சதவீதம் பரிந்துரைக்கிறார்கள். சில விதிவிலக்குகளுக்கு மட்டும் சிடி ஸ்கேன் மூலம் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
பொதுவாக கரோனாவுக்கான அறிகுறிகளாக தொடர்காய்ச்சல், தொடர் இருமல், நாவில் சுவை இழத்தல், மூக்கில் மணம்இழத்தல், திடீர் வயிற்றுப்போக்கு, லேசான மூச்சிறைப்பு போன்றவை வந்த பின் ஒருநாள் கழித்து பரிசோதனை செய்தால், கரோனா இருக்கிறதா அல்லது அது சாதாராண உடல் உபாதைகளா என்பதை அறியலாம்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன் முறை சிறந்தது. நாட்டின் கரோனா பாசிட்டிவ் வீதம் 10 சதவீதத்துக்கும் கீழாக அல்லது 5 சதவீதத்தும் கீழாக வந்தபின் லாக்டவுனை தளர்த்துவதுதான் சிறந்தாக இருக்கும். தற்போது பாசிட்டிவ் சதவீதம் 21 ஆக இருக்கிறது. இதில் 10 சதவீதம் வந்தபின் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்றாலும், சரியான முடிவு என்பது 5 சதவீதத்துக்கும் குறைவாக பாஸிட்டிவ் வீதம் வந்தபின் தளர்த்த வேண்டும்
இ்வ்வாறு டாக்டர் லால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT