Published : 16 May 2021 11:03 AM
Last Updated : 16 May 2021 11:03 AM

உலக நாடுகள் அனுப்பியுள்ள கோவிட் நிவாரணப் பொருட்கள் பட்டியல்?- மத்திய அரசு தகவல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

உலக நாடுகள் அனுப்பியுள்ள கோவிட் நிவாரணப் பொருட்களின் விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிவாரணப் பொருட்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரைந்து விநியோகிக்கும் பணியில் அரசின் முழுமையான அணுகுமுறையுடன் பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

2021 ஏப்ரல் 27 முதல் மே 14 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 10,953 பிராணவாயு செறிவூட்டிகள், 13,169 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 6835 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 4.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

2021 மே 14 அன்று அமெரிக்கா, இத்தாலி, கனடா, தென்கொரியா, ஓமான், பிரிட்டிஷ் ஆக்சிஜன் நிறுவனம் (இங்கிலாந்து), கோஹரூ 3எஸ்பி (ஜப்பான்), கிலீட் (அமெரிக்கா) ஆகிய நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட முக்கிய பொருட்கள்:

• ரெம்டெசிவிர்: 68,810

• டோசிலிசுமாப்: 1,000

• செயற்கை சுவாசக் கருவிகள்: 338

• ஆக்சிஜன் சிலிண்டர்கள்: 900

• ஆக்சிஜன் செறிவூட்டிகள்: 157

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x