Published : 15 May 2021 08:48 AM
Last Updated : 15 May 2021 08:48 AM
தமிழகத்துக்கு வந்த முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்தது
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த ஏப்ரல் 24ம் தேதி, மகாராஷ்டிராவில் 126 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் தனது பணியை தொடங்கின. 20 நாளில் 12 மாநிலங்களுக்கு 7900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விநியோகித்து தனது செயல்பாட்டை ரயில்வே அதிகரித்துள்ளது.
நாட்டின் மேற்கு பகுதியில் ஹபா மற்றும் முந்ரா, கிழக்கே ரூர்கேலா, துர்காபூர், டாடாநகர், அங்குல் ஆகிய இடங்களில் இருந்து ஆக்சிஜனை பெற்று உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஹரியாணா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சிக்கலான பாதைகளை கடந்து இந்திய ரயில்வே கொண்டு செல்கிறது.
இதுவரை 130 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ளன. இதுவரை மகாராஷ்டிராவுக்கு 462, உத்தரப் பிரதேசத்துக்கு 2210, மத்தியப் பிரதேசத்துக்கு 408, ஹரியாணாவுக்கு 1228, தெலங்கானாவுக்கு 308, ராஜஸ்தானுக்கு 72, கர்நாடகாவுக்கு 120, உத்தரகாண்டுக்கு 80, தமிழகத்துக்கு 80, டெல்லிக்கு 2934 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே இதுவரை, சுமார் 500 டேங்கர்களில் 7900 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது.
தமிழகத்துக்கு சென்ற முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை நேற்று காலை விநியோகித்தது. இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விநியோகித்துள்ளன.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு முதல் ஆக்சிஜன் எக்ஸபிரஸ் ரயில்கள் முறையே 40 மெட்ரிக் டன் மற்றும் 118 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT