Published : 14 May 2021 08:43 AM
Last Updated : 14 May 2021 08:43 AM
ஆந்திரா, தெலங்கானா சட்ட மேலவை தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேச சட்ட மேலவை உறுப்பினர்கள் 3 பேர், தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் மே 31 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் முடிவடைகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 16வது பிரிவின் கீழ், காலியாகும் மேலவை உறுப்பினர் இடங்களுக்கு, பதவிக் காலம் முடியும் முன்பே, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
இது குறித்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், கோவிட்-19 இரண்டாம் அலையின் காரணமாக, நிலைமை சீராகும் வரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் சட்ட மேலவை தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என முடிவு செய்தது.
இந்த விஷயத்தில், மாநிலங்களின் கருத்துக்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் ஆணைய அதிகாரிகளின் கருத்துக்களை கேட்ட பின் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT