Published : 21 Dec 2015 09:06 AM
Last Updated : 21 Dec 2015 09:06 AM
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை ஊழல் விவகாரத்தில் இருந்து காப்பாற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர குமாரை சிபிஐ மிரட்டுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார். முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது மின் வாரியத் தலைவர், சுகாதாரத் துறை செயலர் என பல்வேறு முக்கிய பதவி களை அவர் வகித்தார். அப்போது சில பணிகளை தனியாரிடம் அளித் ததில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வளாகம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
‘மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது பல் வேறு ஊழல்கள் நடைபெற்றன. அவை தொடர்பான கோப்புகள், ஆதாரங்களை எடுத்துச் செல்லவே சிபிஐ சோதனை நடத்தியது’ என்றும் ஆம் ஆத்மி கூறி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டெல்லியில் நேற்று கூறியதாவது:
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர குமாரிடம் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. அப்போது டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள் யார், யாரெல்லாம் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினர் என்று சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆதாரம் ஒன்று முதல்வர் கேஜ்ரிவாலிடம் உள்ளது. அது அப்போதைய சங்க தலைவர் அருண் ஜேட்லி எழுதிய பிரதி ஆகும். அந்தப் பிரதியை அவரிடம் கொடுத்த அதிகாரி யார் என்று சிபிஐ அதிகாரிகள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜேந்திர குமாரை பல வகை களில் மிரட்டியுள்ளனர்.
ஊழல் விவகாரத்தில் சிக்கி யுள்ள அருண் ஜேட்லியை காப் பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக சிபிஐ அமைப்பை ஏவி விட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் நேற்று நிருபர் களிடம் கூறும்போது, “இந்திய அரசியலில் நேர்மையின் சின்ன மாக அருண் ஜேட்லி விளங்குகிறார். ஆனால் அவர் மீது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக ஜேட்லி இருந்தபோது எவ்வித ஊழலும் நடைபெற வில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT