Published : 12 May 2021 01:29 PM
Last Updated : 12 May 2021 01:29 PM
பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் இந்திய வகையைச் சேர்ந்தது என்று என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, இது தவறான தகவல் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இந்த கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் லாக்டவுனை அறிவித்துள்ளன.
முதல் அலையை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்தான் என தகவல் வெளியானது. பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் பரவியது தெரிய வந்தது.
இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்கள் உள்ள 44 நாடுகளி்ல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4,500 மாதிரிகள் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உலகஅளவில் பரவியுள்ளது. ஆனால் இந்த புதிய வைரஸை சில ஊகடங்கள் இந்தியாவில் உருவானது என்று தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு இந்திய வகை உருமாறிய கரோனா வைரஸ் என்றும் பெயரிட்டு அழைக்கின்றன. ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை.
இதுபோன்ற எந்த கருத்தையும் உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை. உலக சுகாதார அமைப்பின் 32 பக்க அறிக்கையில் எந்த இடத்திலும் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் இந்திய வகையைச் சேர்ந்தது என்று எங்கும் குறிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் ‘‘இந்தியா’’ என்ற வார்த்தையே அந்த அறிக்கையில் இல்லை.
அடிப்படை ஆதாரமின்றி இதுபோன்ற தகவல்கள் பெரிய அளவில் பரப்பப்படுகின்றன. இது இந்தியாவில் கண்டறியப்படவும் இல்லை.
இவ்வாறு கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT