Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனை யில் திடீரென ஆக்சிஜன் தடைபட்டதால் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்த தாக கூறப்படுகிறது. ஆனால், 11 பேர் மட்டுமே இறந்ததாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் கூறினார். இதனை இறந்தவர்களின் உறவினர்கள், எதிர்க்கட்சியினர் ஏற்க மறுத்து நேற்று மருத்துவமனை முன் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர அரசும் 11 பேருக்கு மட்டுமே தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
திருப்பதி ருய்யா அரசு மருத்துவ மனையில் தற்போது 700 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177 பேர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு திருப் பதி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங் களில் இருந்தும் பல கரோனா நோயாளி கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு திடீரென ஐசியூ வார்டில் ஆக்சிஜன் தடைப்பட்டது. இதனால் கரோனாவால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் உதவி யுடன் உயிரை தக்க வைத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியாட்கள் பலர் அவர்களுக்கு உதவி செய்ய மருத்துவமனைக்குள் சென்றனர். மேலும், இங்கு மருத்துவர் கள் தட்டுப்பாடும் உள்ளது. இதன் காரணமாக ஜூனியர் டாக்டர்கள், செவி லியர்கள் என்ன செய்வதென்றே தெரி யாமல் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினர். இந்த அரை மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்ததாக மருத் துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்குள் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் மற்றும் வருவாய், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ருய்யா மருத் துவமனை முழுவதும் கூச்சலும், அழுகுரலும் ஒலித்தபடி சோகமாக காட்சியளித்தது. பின்னர் சென்னையில் இருந்து இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜனோடு வந்துக்கொண்டிருந்த லாரி ஓட்டுநரை தொடர்பு கொண்டனர். அவர் திருச்சானூர் அருகே வந்துக் கொண்டிருப்பதாக கூறினார். உடனடி யாக விரைந்து வரும்படி மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார். பின்னர் 15 நிமிடங் களில் அந்த லாரி மருத்துவமனை வந் தடைந்தது. அதன் பின்னர் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது. பிறகு நோயாளிகளுக்கு வழக்கம்போல் சிகிச்சையும் தொடர்ந்தது.
ஆட்சியர் ஹரிநாராயணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆக்சிஜ னின் பிரஷர் குறைந்ததால் 11 நோயாளி கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனக் கூறினார். இது வெறும் தொழில் நுட்ப கோளாறுதான் எனவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனால், இறந்து போனவர்களின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மருத் துவமனையின் கதவுகள், ஜன்னல்களை உடைத்தனர். முதலில் 60 பேர் உயி ரிழந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் நேற்று 32 பேர் என கூறப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர் மட்டும் 11 பேர் மட்டுமே என கூறியுள்ளார். இதற்கும் இறந்தவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையை மறைக்காதே என கோஷமிட்டு தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று காலை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதி முன்னாள் எம்எல்ஏ சுகுணம்மா தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினரும் தர்ணா போராட் டம் செய்தனர். இறந்தவர்களின் குடும் பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத் தனர்.
நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதோடு, இறந்து போன 11 பேரின் குடும்பத்தாருக்கு மட்டும் தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்தார். ஆர்ப்பாட்டம் செய்ய ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து திருப்பதி புறப்பட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் வழியிலேயே கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணாவும் நகரி அருகே போலீஸாரால் கைது செய் யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப் பட்டார்.
இது அரசின் கொலைதான்
இது ஆந்திர அரசின் கொலைதான் என சந்திரபாபு நாயுடுவின் மகனும் மேலவை உறுப்பினருமான லோகேஷ் கூறினார். திருப்பதி சம்பவம் குறித்து லோகேஷ் விஜயவாடாவில் பேசும் போது, ‘‘இறந்தவர்களின் குடும்பத் துக்கு தெலுங்கு தேசம் கட்சி சார் பில் இரங்கல்களை தெரிவித்துக்கொள் கிறேன். ஆனால் இது ஜெகன் அரசின் கொலைதான். இறந்தவர்கள் குறித்த கணக்கை குறைவாக காட்டினால், இவர் ஆட்சியில் அதிகாரிகள் செய்யும் தவறுகள் சரியாகி விடுமா" என்று கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT