Published : 11 May 2021 04:39 PM
Last Updated : 11 May 2021 04:39 PM

40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துத் தேர்வின் போது விதிமுறைகள்; வரைவு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துத் தேர்வின் பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

40% க்கும் குறைவான உடல் குறைபாடு உள்ள ஊனமுற்றோர் அல்லது எழுத்துத் திறனைக் கட்டுப்படுத்தும் மருத்துவ பிரச்னைக் கொண்ட நபருக்கு எழுத்துத் தேர்வின்போது எழுத்தர்/கூடுதல் நேரம் வழங்கப்படுவது வழிகாட்டுதல்களை இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை வடிவமைத்துள்ளது.

40% அல்லது அதற்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளவர்கள் எழுத்துத் தேர்வின் போது பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை 29.08.2018 அன்று இந்தத் துறை வெளியிட்டது.

எனினும் 40 %க்கும் குறைவான குறைபாடு உள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு 11.02.2021 அன்று உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்தத் துறையின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் வரைவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, https://drive.google.com/file/d/ 11wUZoURvO4gTgb0S2KmHTz9Roe8vK1qY/view என்ற மின் முகவரியில் இடம் பெற்றுள்ளது.

2021 ஜூன் 1-ஆம் தேதி வரை இந்த வரைவு வழிகாட்டுதல்கள் மீது பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை தெரிவித்துள்ளது. kvs.rao13@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இயக்குநர், கோட்பாடு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, என்று குறிப்பிட்டு பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x