Published : 11 May 2021 02:58 PM
Last Updated : 11 May 2021 02:58 PM

தமிழகம் வசம் கையிருப்பில்  7,89,619 தடுப்பூசிகள்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 7 லட்சம் கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

90 லட்சத்திற்கும் அதிகமான (90,31,691) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை, சுமார் 18 கோடிக்கும் அதிகமான (18,00,03,160) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 17,09,71,429 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அடுத்த மூன்று நாட்களில் 7,29,610 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.
தமிழக நிலவரம் : தமிழ்நாட்டுக்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 சதவீதம் வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,53,391 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,89,619 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன.

புதுச்சேரி நிலவரம் : புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.59 சதவீதம் வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,20,554 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,76,576 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரி வசம் கையிருப்பில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x