Published : 10 May 2021 01:35 PM
Last Updated : 10 May 2021 01:35 PM
ஒரு கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 9,24,910 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.
இதுவரை, சுமார் 18 கோடி (17,93,57,860) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,89,27,797 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக நிலவரம் : தமிழ்நாட்டுக்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 67,64,573 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8,78,437 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன.
புதுச்சேரி நிலவரம் : புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.59 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,17,216 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,79,914 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT