Published : 08 May 2021 11:54 AM
Last Updated : 08 May 2021 11:54 AM
நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
கோவிட் சிகிச்சை பெறுபவர்களுக்காக தனிமை ரயில் பெட்டிகளை, ரயில்வே தயார் செய்து தயார் நிலையில் வைத்திருந்தது. 70,000 படுக்கை வசதிகளுடன் 4,400 தனிமைப் பெட்டிகள் ரயில்வேயிடம் தயார் நிலையில் உள்ளன.
மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப, இந்தத் தனிமைப் பெட்டிகளை ரயில்வே உடனடியாக அனுப்பி வருகிறது.
சமீபத்தில், அசாம் மாநில அரசு விடுத்த வேண்டுகோளின்படி குவஹாதிக்கு 21 தனிமைப் பெட்டிகளையும், சில்சர் அருகேயுள்ள பாதர்பூர் ரயில் நிலையத்துக்கு 20 தனிமைப் பெட்டிகளையும் ரயில்வே விரைவாக அனுப்பியுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், சமர்பதி, சந்த்லோதியா மற்றும் திமாப்பூர் ஆகிய இடங்களுக்குத் தனிமைப் பெட்டிகள் அனுப்பப்பட்டன. மாநிலங்களின் கோரிக்கைப்படி 298 தனிமைப் பெட்டிகள் 4,700 படுக்கை வசதிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குஜராத் விடுத்த வேண்டுகோள் படி சபர்மதிக்கு 10 தனிமைப் பெட்டிகளும், சந்தோலியாவுக்கு 6 தனிமைப் பெட்டிகளும் அனுப்பப்பட்டன. நாகலாந்து வேண்டுகோள்படி, திமாபூரில் 10 தனிமைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 70 படுக்கை வசதிகளுடன் 5 தனிமைப் பெட்டிகள் ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டன. பால்கரில் 21 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றுடன் 2 ஜோடி ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
பல மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள தனிமைப் பெட்டிகளில் 177 பேர் அனுமதிக்கப்பட்டு, 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 கோவிட் நோயாளிகள் தற்போது தனிமைப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு 4,700 படுக்கைகள் காலியாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT