Published : 07 May 2021 08:29 AM
Last Updated : 07 May 2021 08:29 AM
விமான போக்குவரத்து துறையினருக்கு குறித்த காலத்துக்குள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய தடுப்பூசி திட்டத்தை விரைவாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 அதிகரிப்பின் போது, மக்கள் மற்றும் முக்கியமான மருத்துவ பொருட்களின் போக்குவரத்துக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்ய விமான போக்குவரத்து துறையினர் அயராது உழைக்கின்றனர். எனவே, இவர்களுக்கு கோவிட்விட் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் விமான போக்குவரத்து துறை செயலாளர் ஏற்கனவே கடிதம் அனுப்பினார்.
மேலும், விமான போக்குவரத்து சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும், விரைவாக தடுப்பூசி போட, அந்தந்தந்த விமான நிலையங்களில் பிரத்தியேக தடுப்பூசி மையத்தை விமான நிலைய நிர்வாகிகள் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
விமான நிலையங்களில் தடுப்பூசி மையம் அமைக்க விருப்பம் உள்ள மாநில அரசுகள்/தனியார் மருத்துவமனைகளை விமான நிலைய நிர்வாகிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், விமான ஊழியர்கள், பயணிகளை சந்திக்கும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள சிறப்பு அதிகாரி, மாற்று அதிகாரி, ஆகியோர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து விமான நிலைய நிர்வாகிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சவால்களை தீர்க்க இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுப்பூசி போடுவதில் உள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வார் என வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT